Our volunteer will get in touch with you personally to clarify your queries.

மாபெரும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்!

சங்கர நேத்ராலயா — கண் மருத்துவமனை, சென்னை

முகாம் நடைபெறும் விவரங்கள்
முகாம் நடைபெறும் தேதி:
  • 24.12.2025 – புதன் கிழமை முதல்
  • 30.12.2025 – செவ்வாய் கிழமை வரை
  • 7 நாட்கள் கண்புரை பரிசோதனை நடைபெறும்.
பரிசோதனையின் அடிப்படையில் தகுதி பெறும் நபர்களுக்கு, மேற்கண்ட நாட்களில் இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படும்.

அறுவை சிகிச்சை செய்யப்படும் நாட்கள்:
  • 28.12.2025 – ஞாயிறு முதல்
  • 01.01.2026 – வியாழன் வரை
முகாம் நேரம்:
  • காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
முகாம் நடைபெறும் இடம்:
  • பண்ணை வெங்கட்ராமையர் மேனிலை பள்ளி,
    கோபாலசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
கண் புரை பாதிப்புக்கான சிறப்பு பரிசோதனை

சங்கர நேத்ராலயா, சென்னை, திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றின் இணைப்பில், பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

முகாமின் முக்கிய அம்சங்கள்
  • இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை (Cataract) கண்டறிதல்.
  • தேவையானவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முற்றிலும் தையல் இல்லாத நவீன சிறிய வெட்டு (Microscopic Small Incision) முறையில் செய்யப்படும்.
  • நவீன நடமாடும் கண் அறுவை சிகிச்சை வாகனம் (Mobile Eye Surgical Unit) மூலம் அறுவை சிகிச்சை.
  • அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஆபரேஷன், I.O.L. லென்ஸ், கருப்பு கண்ணாடி, மருந்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
  • அனுபவமிக்க சங்கர நேத்ராலயா கண் மருத்துவர்களால் சிகிச்சை நடத்தப்படும்.
  • Ambulatory Service மூலம், அறுவை சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பும் வசதி.
  • அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வழிகாட்டுதல் மற்றும் பராமரிப்பு.
யாரெல்லாம் பயன் பெறலாம்?
  • பார்வை குறைபாடு உள்ளவர்கள்
  • கண் புரை பாதிப்பு உள்ளவர்கள்
  • பொருளாதார ரீதியாக சிகிச்சை பெற இயலாதவர்கள்
  • முதியோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும்

இந்த அரிய வாய்ப்பை உங்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முகாமிற்கு வருவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
  • முகாமிற்கு வரும்போது அடையாள அட்டை (ஆதார் கார்டு) நகல் கட்டாயமாக கொண்டு வரவும்.
  • பிற நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள், முகாமிற்கு வரும்போது அந்த மருந்து மாத்திரைகளை அவசியமாக கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் பார்வை – எங்கள் பொறுப்பு!

கண் புரை அறுவை சிகிச்சை குறித்து அறிய – இன்றே முன்பதிவு செய்யுங்கள்
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்:
📞 63823 00408 | 82201 07330 | 83049 06031

சங்கர நேத்ராலயா – நம்பிக்கைக்குரிய கண் சிகிச்சை, சேவையின் அடையாளம்.

© 2026 GoPals | All rights reserved.